பிரதான செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் வீனஸ் -செரீனா சகோதரிகள் போட்டியிடவுள்ளனர்.

அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் இறுதிப்போட்டியில் சகோதரிகளான வீனஸ் வில்லியம்ஸ், செரீனா வில்லியம்ஸ் இருவரும்  போட்டியிடவுள்ளனர்.

அவுஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியில் இன்று மகளிர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனை கோகோ வேன்டேவேக்கை 6-7 (3-7) 6-2 6-3 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

அதன்பின்னர் நடந்த இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் செரீனா வில்லியம்ஸ், குரோஷியாவின் மிர்ஜானா லூசிக் பரோனியை எதிர்கொண்டு  6-2 6-1 என்ற நேர்செட்களில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.
இந்தநிலையில்  எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள சம்பியன் பட்டத்துக்கான இறுதிப் போட்டியில்  சகோதரிகளான வீனஸ் மற்றும் செரீனா  ஆகியோர் போட்டியிவுள்ளனர்.

கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சகோதரிகள்  இருவரும் நேருக்கு நேர் மோதுவது இது 9-வது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.