குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தற்போது நாட்டில் நிலவி வரும் வறட்சியான காலநிலை பல பில்லியன் ரூபா நட்டத்தை ஏற்படுத்தக் கூடுமென சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இலங்கையின் அண்மைய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான வறட்சி காலநிலை தற்போது பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.நீரேந்துப் பகுதிகளில் நீர் மட்டம் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும், நீர் மின் உற்பத்தி பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அனல் மின் உற்பத்தி ஊடாக நாட்டின் மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படுவதனால் பாரியளவில் செலவு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. நீரை சிக்கனமாக சேமிப்பது குறித்து அரசாங்கம் பல்வேறு வழிகாட்டல்களை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மழையின்றி தொடர்ச்சியாக வறட்சி நீடிப்பதனால் நாடு பாரியளவில் நிதி நட்டத்தை எதிர்நோக்கும் எனவும் மக்கள் பாரியளவில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.