குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஐரோப்பா ஆபிரிக்காவில் முகாம் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கான நிதி உதவிகளை ஐரோப்பா வழங்கத் திட்டமிட்டுள்ளது. மத்திய தரைக் கடலின் ஊடாக ஐரோப்பாவை நோக்கி வருவதனை தடுக்கும் நோக்கில் இந்த முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.
ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் இவ்வாறு முகாம்கள் அமைக்கப்பட உள்ளதாகவும் பொருளாதார நலன்களை அடிப்படையாகக் கொண்டு புகலிட கோரிக்கையாளர்களின் எண்ணிக்கை பல்கிப் பெருகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு பொருளாதார நோக்கங்களை முன்னிலைப்படுத்திய புகலிடக் கோரிக்கையாளர்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் தீர்மானித்துள்ளனர். ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த 4500 புகலிடக் கோரிக்கையாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும் நீரில் மூழ்கி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவிற்குள் பிரவேசிக்க முற்படும் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு போதியளவு பாதுகாப்பை வழங்கக்கூடிய இடங்களை உருவாக்கும் நோக்கில் முகாம்கள் அமைக்கப்பட உள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.