Home இலங்கைஜனாதிபதியின் கருத்தை மறுக்கின்றார் அமைச்சர் ராஜித சேனாரட்ன

ஜனாதிபதியின் கருத்தை மறுக்கின்றார் அமைச்சர் ராஜித சேனாரட்ன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்தை, சுகாரார அமைச்சர் ராஜித சேனாரட்ன நிராகரித்துள்ளார்.  ஓரினச் சேர்க்கையாளர் மற்றும் பாலியல் தொழில் தொடர்பில் அண்மையில் ஜனாதிபதி கருத்து வெளியிட்டிருந்தார். ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்களுக்கு அனுமதியளித்தல் மற்றும் பாலியல் தொழிலை சட்ட ரீதியானதாக்குவது ஆகியன தொடர்பிலான அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்ட போது அவற்றை தூக்கி வீசியதாக அண்மையில் ஜனாதிபதி கூறியிருந்தார்.

எனினும், இந்த கருத்தை மறுக்கும் வகையில்  ராஜித கருத்து வெளியிட்டுள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர் திருமணங்கள் மற்றும் பாலியல் தொழில் சட்ட ரீதியானதாக்குதல் போன்றன குறித்த உத்தேச சட்டங்கள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் அனைத்து இலங்கையர்களினதும் உரிமையை உறுதி செய்யும் வகையிலான உத்தேச சட்டங்களே அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டது எனவும் ஓரினச்  சேர்க்கையாளர் உரிமைகள் குறித்து அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும் ராஜித குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More