குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாகிஸ்தானில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஒருவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. குரோத உணர்வைத் தூண்டும் வகையில் பேசியதாகக் குற்றம் சுமத்தி இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் முதனிலை தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்கு கால வரையறையற்ற வகையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் இலத்திரனியல் ஊடகக் கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஆமிர் லியாகோற் ( Aamir Liaquat ) என்பவருக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட ஐந்து செயற்பாட்டாளர்கள் தொடர்பில் குரோத உணர்வைத் தூண்டும் வகையில் ஆமிர் லியாகோற் கருத்து வெளியிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டாளர்கள் இஸ்லாத்தை அவமரியாதை செய்ததாக தொகுப்பாளர் ஆமிர் லியாகோற் சுமத்தியிருந்தார். தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பகிரங்கமாக சிலரை விமர்சனம் செய்ததாக ஆமிர் லியாகோற் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.