156
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கான உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக்குழுவிற்காக மூன்று பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்றுக்கொண்ட கணக்காய்வாளர் நாயகமான கே.வேலுப்பிள்ளை, ஓய்வு பெற்றுக்கொண்ட நீதவான்களான கே.சித்ரசிறி மற்றும் ரீ.எஸ். ஜயவர்தன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மத்திய வங்கி பிணை முறி கொடுக்கல் வாங்கல்கள் இடம்பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Spread the love