குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோா் அமைப்பின் பிரதேச குழுக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட மாற்று வலுவுள்ளோா் அமைப்பின் செயற்பாடுகளை இலகுப்படுத்தும் நோக்குடன் பிரதேச குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட மாற்றுவலுள்ளோா் அமைப்பினா் தெரிவித்துள்ளனா்.
முதல் கட்டமாக கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிாிவில் பிரமந்தனாறு, கல்லாறு.மயில்வாகனபுரம்,நாதன் குடியிருப்பு, உழவனூர் ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய மாற்றுவலுள்ளோா் பிராந்திய குழு அமைக்கப்பட்டுள்ளது.அத்தோடு அங்கு மாற்று வலுவுள்ளோருக்கான விழிப்புணா்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிகழை்வில் கிராம அலுவலா் சாந்தி கிருஸ்ணா, கிளிநொச்சி மாற்றுவலுவுள்ளோா் சங்கத்தின் தலைவா் ஆறுமுகம் சிவநேசன், பிரதேச இணைப்பாளா் வே.கௌரிதாசன் மற்றும் வன்னியசிங்கம் ஆகியோா் கலந்துகொண்டனா்