Home இலங்கைவாகனமொன்றைக் கொண்டு மஹிந்தவின் பாதுகாப்பை பரீட்சித்த கூட்டு எதிர்க்கட்சி

வாகனமொன்றைக் கொண்டு மஹிந்தவின் பாதுகாப்பை பரீட்சித்த கூட்டு எதிர்க்கட்சி

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

வாகனமொன்றைக் கொண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பை கூட்டு எதிர்க்கட்சியினர் பரீட்சித்துள்ளனர். மஹிந்த ராஜபக்ஸ இன்றி வாகனமொன்றை அனுப்பி அவரது பாதுகாப்பு நிலைமைகள் பற்றி கண்காணிக்கப்பட்டுள்ளது.

நுகேகொடையில் இன்றைய தினம் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற போது முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
வாகனத்திற்குள் மஹிந்த போன்தொரு டம்மி உருவத்தை வைத்து அனுப்பி பாதுகாப்பு நிலைமைகளை கண்காணித்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜொன்ஸ்டன் உரையாற்றிக் கொண்டிருந்த போது இடைநடுவில் மஹிந்தவின் வாகனம் மேடையை நோக்கி வந்து பின்னர், வாகனம் திரும்பச் சென்றுவிட்டது. இதன் போது பாதுகாப்பு நிலைமைகளை கண்டறிவதற்காக இவ்வாறு ஓர் யுத்தியை பின்பற்றியதாக ஜொன்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More