குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சி தற்போது பெய்து வரும் காற்றுடன் கூடிய மழை காரணமாக பாடசாலை ஒன்றில் வகுப்பறைகள் சேதமடைந்துள்ளன.
நேற்று வியாழக்கிழமை இரவு வேளை பெய்த காற்றுடன் கூடிய அடை மழை காரணமாக கிளிநொச்சி புளியம்பொக்கணை கலவெட்டிதிடல் நாகேந்திரா வித்தியாலய பாடசாலை தற்காலிக வகுப்பறை கட்டடமே சேதம் அடைந்துள்ளதுடன் இதனால் பாடசாலை கற்றல் நடவடிக்கைகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது
தரம் ஒன்று தொடக்கம் பதினொன்றுவரை வகுப்புக்களை கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் நான்கு வகுப்புக்கள் மட்டுமே நிரந்தரக்கட்டிடத்தில் இயங்கிவருகின்றன.
குறித்த கிராமப்புற பாடசாலையான கலவெட்டித்திடல் நாகேந்திரா வித்தியாலயத்திற்கு மாணவர்கள் நல்லமுறையில் கல்வி கற்பதற்கு ஒரு நிரந்தரக்கட்டிடத்தினையாவது பெற்றுத்தருமாறு பெற்றோர்களும் பழையமாணவர்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.