குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர் குறித்த இணக்கப்பாட்டை ரத்து செய்ய நேரிடும் என துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. இராணுவ சதிப் புரட்சி முயற்சியுடன் தொடர்புடைய எட்டு படைவீரர்கள் கிரேக்கத்திற்கு தப்பிச் சென்றுள்ளதாகவும் இவ்வாறு கிரேக்கத்திற்கு தப்பிச் சென்றுள்ள துருக்கி படையினரை மீளவும் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
குறித்த படையினரை நாடு கடத்துமாறு துருக்கி விடுத்த கோரிக்கையை கிரேக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கோரிக்கை ஏற்றுக்கொள்ளாத பட்சத்தில் புகலிடக் கோரிக்கையாளர் குறித்து ஏற்படுத்திக் கொண்டுள்ள இணக்கப்பாட்டை ரத்து செய்யப் போவதாகவும் வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நேரிடும் எனவும் துருக்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.