இந்திய நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பகல்வேளையில் குண்டு வெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இது தொடர்பில் அந்தந்த மாநிலங்களின் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தெரிவித்து 5 தீவிரவாதிகளை ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று இந்திய தேசிய புலனாய்வு குழுவினர் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து அவர்களை பெப்ரவரி 10ம் திகதி வரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதனைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.