Home இந்தியா இந்திய நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

இந்திய நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறைத்தண்டனை

by admin

இந்திய நீதிமன்றங்களில் வெடிகுண்டு வைத்த 5 தீவிரவாதிகளுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம்  தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய 4 மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் பகல்வேளையில் குண்டு வெடிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. இது  தொடர்பில்  அந்தந்த மாநிலங்களின்  காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் குண்டுவெடிப்பில் தொடர்புடையதாக தெரிவித்து 5 தீவிரவாதிகளை ஆந்திர மாநிலம் சித்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று  இந்திய தேசிய புலனாய்வு குழுவினர் முன்னிலைப்படுத்தினர்.

இதனையடுத்து அவர்களை பெப்ரவரி 10ம் திகதி வரை சிறையில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதனைத் தொடர்ந்து  அவர்கள் அனைவரும் சித்தூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More