மகாராஷ்டிர அரசு அலுவலகங்களில் பண்டிகைகள் கொண்டாட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அரச அலுவலகங்கள், நிறுவனங்கள், பல்வேறு துறைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மதரீதியான எந்தப் பண்டிகைகளையும் கொண்டாடக் கூடாது எனவும் அங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து சுவாமிப் படங்களை அகற்ற வேண்டும் எனவும் அண்மையில் எல்லா நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப் பப்பட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. சிவசேனா கட்சி மற்றும் அரச ஊழியர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்து வந்தனர்.
இந்தநிலையில் நேற்றையதினம் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸை சிவசேனா அமைச்சர்கள் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அரச அலுவலகங்களில் மதரீதியான பண்டிகைகள் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக மகாராஷ்டிர முதலமைச்சர் அறிவித்துள்ளார்.