பாகிஸ்தான் கிரிக்கெட் அணித்தலைவர் அசார் அலிக்கு ஒரு ஆட்டத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் அடிலெய்டில் இடம்பெற்ற அவுஸ்திரேலியா – பாகிஸ்தான் அணிகள் இடையிலான 5-வது ஒருநாள் போட்டியின் போது ஓவர்கள் வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக அசார் அலி மீது குற்றம் சுமத்தியுள்ள ஐசிசி அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாட தடை விதித்துள்ளது.
இதனால் எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக நடைபெறும் தொடரின் முதல் ஆட்டத்தில் அசார் அலி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தடையுடன் அசார் அலிக்கு போட்டியின் சம்பளத்தில் இருந்து 40 சதவீத அபராதமும், சக அணி வீரர்களுக்கு 20 சதவீத அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது