Home இந்தியாதமிழகத்தின்புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோயால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தின்புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோயால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

by admin


தமிழகத்தின் புதுச்சேரியில் பன்றிக் காய்ச்சல் நோயால் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதனையடுத்து  மருத்துவக் குழுவினர் வீடு வீடாகச் சென்று காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டவர்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் புதுச்சேரியில் ஒரே நாளில் ஒரே பகுதியைச் சேர்ந்த 2 பெண்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.  சுற்றுலா ஒன்றுக்கு சென்று திரும்பிய நிலையில் இவர்கள்  பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சுற்றுலா சென்று திரும்பிய பலரும் காய்ச்சல் காரணமாக  பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டதனை தொடர்ந்து சுற்றுலா சென்று திரும்பியவர்களும் அவர்களது குடும்பத்தினரும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More