Home இலங்கை யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டனை விதிக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் தண்டனை விதிக்கப்பட வேண்டுமென முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் இருந்தால் அவர்களின் தராதரம் பதவி என்பனவற்றை கருத்திற் கொள்ளாது உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் சில வேளைகளில் இரண்டு லட்சம் கொண்ட இலங்கைப் பாதுகாப்புப் படையில் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட சிலர் இருக்கலாம் எனவும் அவ்வாறு இல்லை என பூரணமாக நிராகரிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எவரும் படையில் இல்லை எனக் கூறினால் அது யதார்த்தமான கூற்றாக அமையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உலகின் ஏனைய இராணுவங்களிலும் இவ்வாறான குற்றவாளிகள் ஒரு சிலர் இல்லாhமில்லை என முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More