குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இரண்டு தடவைகள் ஆட்சி செய்ததன் பின்னர் ஓய்வு பெற்றிருக்க வேண்டுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வு பெற்றுக்கொள்ளத் திட்டமிட்டிருந்ததாகக் கூறும் மஹிந்த ராஜபக்ஸ எதற்காக 18ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக பதவி காலத்தை நீடித்துக் கொள்ள முயற்சித்தார் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆகியோர் இரண்டு தடவைகள் ஆட்சி நடத்திய பின்னர் ஓய்வு பெற்றுக் கொண்டதாகவும் மஹிந்த ராஜபக்ஸ அதிகார மோகத்தில் செயற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியின் சிலரை கூட்டு எதிர்க்கட்சியின் மேடையில் ஏற்றுவதற்கு மஹிந்த முயற்சித்த போதிலும் அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.