குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நடுவரின் தீர்ப்பு குறித்து இங்கிலாந்து கிரிக்கட் அணி எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்று முடிந்த இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு 20 போட்டியில் இங்கிலாந்து 5 ஓட்டங்களினால் தோல்வியடைந்தது. இந்தப் போட்டியின் போது நடுவர் வழங்கிய தீர்ப்பு ஒன்று தொடர்பில் இங்கிலாந்து அணித் தலைவர் இயோன் மோர்கன் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
20ம் ஓவரில் அணியின் வீரர் ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக நடுவர் தீர்மானித்திருந்தார். எனினும் குறித்த பந்து மட்டையில் பட்டே காலில் பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடுவரின் தீர்ப்பு போட்டியின் வெற்றி தோல்வியை நிர்ணயிக்க ஏதுவாக அமைந்தது என்ற அடிப்படையில் இந்த முறைப்பாடு செய்யப்பட உள்ளது. இந்த விடயம் குறித்து போட்டி மத்தியஸ்தரிடம் இங்கிலாந்து நிர்வாகம் முறைப்பாடு செய்ய உள்ளது.