கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கிப் பாயும் பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் கேரள அரசு தடுப்பணைகளைக் கட்டி வருகிறது. தமிழக அரசின் ஒப்புதல் பெறாமல், தடுப்பணைகளை கேரள அரசு கட்டத் தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், தடுப்பணைகளைக் கட்டும் கேரள அரசைக் கண்டித்தும், கட்டுமானப் பணிகளை மத்திய அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும் தமிழக – கேரள எல்லையான கோவை மாவட்டத்தின் ஆனைக்கட்டியில் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நேற்று நடைபெற்றது.
தடுப்பணை கட்டுமானப் பணி களை தடுத்து நிறுத்தப்போவதாகக் கூறி போராட்டக் குழுவினர் கேரள எல்லையில் நுழைய முயன்றனர். அவர்களை தமிழக போலீஸார் தடுத்து நிறுத்தியதால் அங்கு மோதல்கள் ஏற்பட்டதையடுத்து 37 பெண்கள் உட்பட 450 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.