குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
இராணுவத்தின் ஊடாக கஞ்சா பயிரிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு தேவையான பல ஆயுர்வேத மருந்துப் பொருட்கள் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கஞ்சா பயிரிடுவது குறித்த யோசனை ஒன்றை தாம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்திருந்ததாகத் தெரிவித்துள்ளார். பௌத்த மாநாயக்க தேரர்களும் இதற்கு எதிர்ப்பை வெளியிடவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். கஞ்சாவை போதைப் பொருளாக பயன்படுத்துவது ஆபத்தானது எனினும் அதனை மருந்தாகப் பயன்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.