குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் எனப்படும் கருணா தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு நீதிமன்றில் அறிவித்துள்ளது. அரசாங்க வாகனங்களை துஸ்பிரயோகம் செய்ததாக கருணா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்றைய தினம் கொழும்பு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த விசாரணை அறிக்கை சட்ட மா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நிதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
கருணாவின் பாதுகாப்பு தொடர்பில் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் இதனால் பிரதி ஞாயிறு தோறும் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவினை தளர்த்துமாறு கருணா சார்பில் தோன்றிய சட்டத்தரணி கோரியுள்ளார். இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதவான், மாதம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டுள்ளார்.