Home இந்தியாபேரறிவாளன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

பேரறிவாளன் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

by admin


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் இன்றையதினம் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வேலூர் சிறைச்சாலையில் சக கைதியான  ராஜேஷ் கண்ணா என்பவரால் இரும்பு கம்பி கொண்டு தாக்கப்பட்ட வழக்கில் சாட்சியம்  அளிப்பதற்காகவே பேரறிவாளன் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

கடந்த ஆண்டு ராஜேஷ் கண்ணா திடீரென இரும்பு கம்பியால் தாக்கியமையினால் தலையில் காயமடைந்த பேரறிவாளன் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு; குணம் அடைந்த பின்னர்  அவர் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

இதுதொடர்பாக பேரறிவாளன் தரப்பில் வேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More