174
ஐ.டீ.எச் தொற்றுநோய்களுக்கான தேசிய மருத்துவ ஆய்வு நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட நோயாளர் வார்ட்டும், பற் சிகிச்சை நிலையமும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களினால் இன்று திறந்துவைக்கப்பட்டன.
டெங்கு நோயாளர்களை அனுமதிக்கும் நோக்கில் இலங்கை இராணுவத்தின் அனுசரணையில் இந்த நோயாளர் விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக இராணுவத்தினர் வழங்கிய பங்களிப்பினை கௌரவிக்கும் முகமாக மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சுதத்த ரனசிங்க மற்றும் மருத்துவமனைக்கு தாதியர்களை அமர்த்திய இலங்கை கடற்படையினருக்கும் ஜனாதிபதி அவர்களால் நினைவுச் சின்னங்கள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
Spread the love