ருமேனியாவில் ஊழல் தடுப்பு தொடர்பாக புதிய சட்டம் கொண்டுவந்த அரசாங்கத்துக்கு எதிராக பல லட்சம் பேர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
சோசலிஸ்ட் ஜனநாயக கட்சியின் ஆட்சி நடைபெற்று வரும் ருமேனியாவில் பல்வேறு ஊழல் தொடர்பாக அரசியல் பிரமுகர்கள், அதிகாரிகள் என பலரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 44 ஆயிரம் யூரோக்கு அதிகமாக ஊழல் செய்பவர்களை மட்டுமே சிறையில் வைக்க முடியுமென சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம சிறையில் உள்ள ; பல அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் தண்டனையில் இருந்து தப்பும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தே பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
போராட்டம் மேற்கொள்பவர்கள் போலீசார் மீது பட்டாசு மற்றும் புகை குண்டுகளை வீசியதாகவும் பதிலுக்கு போலீசாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன் தடியடியும் நடத்தியதாகவும் இதை தொடர்ந்து அங்கு பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.