குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரசியல் சாசனத் திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கால மாறு நீதிப் பொறிமுறைமையை விடவும் அரசியல் சாசனத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என நல்லிணக்க பொறிமுறைமை குறித்த விசேட செயலணியின் உறுப்பினர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போது அவர் தெரிவித்துள்ளார்.
செயலணியின் அறிக்கை தொடர்பிலும் கால மாறு நீதிப் பொறிமுறைமை குறித்தும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. கால மாறு நீதிப் பொறிமுறைமையை விடவும் அரசியல் சாசன திருத்தங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி அனைத்து தரப்பினரும் கால மாறு நீதிப் பொறிமுறைமைக்கு ஆதரளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.