நாகாலாந்தில் உள்ளாட்சி தேர்தல் காரணமாக வன்முறைகள் வெடித்து உள்ளதாகவும் மாநிலத்தின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருவதால் பதட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் இஅந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நாகாலாந்து உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டதனைக் கண்டித்து நடைபெற்ற பேரணியில் இடம்பெற்ற வன்முறையில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர். இதனையடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் பெப்ரவரியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டது. இதற்குக் பழங்குடியின அமைப்புகள் உள்பட பல அரசியல் கட்சியினரும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.