குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹம்பாந்தோட்டை துறைமுக கொடுக்கல் வாங்கல் குறித்து இந்த வாரம் தீர்மானிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் அரசாங்க முயற்சியான்மை ஒன்றான china merchants port holdings ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கொள்வனவு செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துறைமுகத்தை விற்பனை செய்வது குறித்த விடயங்கள் இந்த வாரத்திற்குள் இறுதியாக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஒரு சில விடயங்கள் இன்னும் முடிவாகவில்லை எனவும் விரைவில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 வீதமான பங்குகளை china merchants port holdings நிறுவனத்திற்கு விற்பனை செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் 1.12 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு துறைமுகம் வழங்கப்பட உள்ளது.