Home இலங்கைமஹிந்த ராஜபக்ஸ உடனடியாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் – ருவான் விஜேவர்தன

மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டும் – ருவான் விஜேவர்தன

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ உடனடியாக அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமென பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸ , அரசாங்கத்தின் திட்டங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் எனவும் அல்லது அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசாங்கம் நாட்டில் நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் முயற்சிகளை தீவிரப்படுத்தி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ,  இனங்களுக்கு இடையில் முரணப்பாட்டை ஏற்படுத்தி அதன் ஊடாக அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும் அவர் சுட்டிக்காபட்டியுள்ளார்.

நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் அபிவிருத்தியை நிலைநாட்டவும் அரசாங்கத்திற்கு மஹிந்த ஆதரவளிக்க  வேண்டும் எனவும் அவ்வாறு முடியாவிட்டால் உடனடியாக அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More