குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்களால் முன்னேடுக்கப்பட்டு வரும் வரும் போராட்டத்திற்கு எதிராக கருத்து தெரவித்த வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரனின் உருவ பொம்மை போராட்ட காரர்களால் எரிக்கபட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை கோண்டாவில் டிப்போவில் இருந்து அமைச்சரின் உருவ பொம்மைக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக யாழ்.மத்திய பேருந்து நிலையத்திற்கு சென்ற போராட்ட காரர்கள் அங்குஇந்து சமய முறைப்படி இறுதி கிரியைகள் செய்து உருவ பொம்மையினை எரித்தனர்.
வவுனியாவில் நேற்று முன்தினம் இ.போ.ச. சாரதி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்தும், தாக்குதலாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வவுனியாவில் புதிதாக திறந்து வைக்கப்பட்டு உள்ள மத்திய பேருந்து நிலையத்தினை இ.போ.ச க்கு வழங்குமாறு கோரிக்கைகளை முன் வைத்து நேற்று முதல் இ.போ.ச ஊழியர்கள் வடமாகாணம் தழுவிய ரீதியில் பணிபகிஸ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் , நேற்றைய தினம் மாலை வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் இந்த போராட்டம் பயனற்றது ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் இல்லை எனில் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஊடகங்களுக்கு தெரிவித்து இருந்தார்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்றைய தினம் ஊழியர்கள் அமைச்சரின் உருவ பொம்மையிணை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.