குளோபல் தமிழ்; செய்தியாளர்
Iran’s Foreign Minister Mohammad Javad Zarifஅச்சுறுத்தல்களுக்கு அடி பணியப் போவதில்லை என ஈரான் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஈரானிய வெளிவிவகார அமைச்சர் மொகமட் ஜவாட் ஷாறிப் (Mohammad Javad Zarif) டுவிட்டர் ஊடாக இதனைத் தெரிவித்துள்ளார்.
ஏவுகணை பரிசோதனை குறித்த அமெரிக்காவின் அச்சுறுத்தல்களை கண்டு அஞ்சப் போவதில்லை என குறிப்பிட்டுள்ள அவர் யுத்தத்திற்கு ஆயத்தமாகவில்லை எனவும், சுய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எந்தவொரு நாட்டுக்கு எதிராகவும் இராணுவத்தைப் பயன்படுத்த ஈரான் விரும்பவில்லை எனவும் சில வேளைகளில் தேவைப்பட்டால் சுய பாதுகாப்பிற்காக பயன்படுத்த நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.