இலங்கையின் எந்தவொரு பகுதியிலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு சீனாவிற்கு அனுமதி வழக்கப்பட மாட்டாது என சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
எந்தவொரு பகுதியும் இராணுவ நோக்கங்களுக்காக வழங்கப்படாது எனவும், அண்டை நாடுகள் பற்றி கவனம் செலுத்தியே தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் சீன முதலீட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
அண்டை நாடுகள் சந்தேகத்திற்கோ பதற்றத்திற்கோ உள்ளாகும் வகையிலான சூழ்நிலையை உருவாக்கப் போவதில்லை எனத் தெரிவித்த அவர், இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து செயற்பட உள்ளதாகவும், ஹம்பாந்தோட்டை பகுதி சீன இராணுவத்தேவைகளுக்கு வழங்கப்படாது என்பது திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.