இலங்கை பெறுமதி வாய்ந்த நட்பு நாடு என இந்தியா புகழாரம் சூட்டியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வலுவான நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
இலங்கையின் 69ம் சுதந்தி தின நிகழ்வுகளை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் வாழத்துச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இலங்கை தேசிய இலக்குகளை அடைவதற்கு தொடர்ந்தும் இந்தியா ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் தனித்துவமான உறவுகள் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இலங்கையுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஈரான் அறிவிப்பு:-
இலங்கiயுடன் தொடர்புகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாக ஈரான் அறிவித்துள்ளது. ஈரானிய ஜனாதிபதி HassanRouhani இலங்கைக்கு அனுப்பி வைத்துள்ள சுதந்திர வாழ்த்துச் செய்தியில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அவர் இந்த வாழ்த்துச் செய்தியை அனுப்பி வைத்துள்ளார். இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் சிறந்த உறவுகள் உருவாகும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

