367
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலம்பே தனியார் மருத்துவ கல்லூரி ஓர் சொத்தாகும் என பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தனியார் மருத்துவ கல்லூரிகள் அமைப்பதில் எவ்வித தவறும் கிடையாது என குறிப்பிட்டுள்ள அவர் தனியார் மருத்துவ கல்லூரிகளை அமைப்பதன் மூலம் இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளில் கல்விக்காக செலவிடும் பணம் சேமிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் அரச பல்கலைக்கழகங்களில் கல்வி பயில முடிவதில்லை எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
Spread the love