181
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ட்ராம்பின் புகலிடக் கோரிக்கையாளர் தடைக்கு எதிராக பிரிட்டனில் போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரிட்டனின் லண்டனில் அமைந்துள்ள அமெரிக்க தூதரகத்திற்கு எதிரில் ஆயிரக் கணக்கானவர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஏழு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிக அடிப்படையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவிற்கு எதிராக லண்டனில் பாரியளவில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ட்ராம்பின் வெளிவிவகாரக் கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Spread the love