171
ஹட்டன் நோட்டன்பிரிட்ஜ் மற்றும் கினிகத்தேனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட நோட்டன் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீயினால், சுமார் 30 ஏக்கருக்கும் மேற்பட்ட காட்டுப்பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கடும் வெயிலுடன் காற்றும் வீசுவதால் தீயின் பாதிப்பு அதிகரித்துள்ளது.
சில விஷமிகள் இக்காட்டுப்பகுதிக்கு தீ வைத்திருக்கலாம் என் சந்தேகம் வெளியிடப்பட்டள்ளது. எனினும், நோட்டன்பிரிட்ஜ் காவல்துறையினரும் இராணுவத்தினரும் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் நேற்று மாலை தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். எனத் தெரிவிக்கப்பட்டள்ளது
Spread the love