174
கிளிநொச்சி வட்டக்கச்சியில் உள்ள கிராம அலுவலா் காணியிலிருந்து மிதி வெடி ஒன்று நேற்று ஞாயிறு மீட்கப்பட்டுள்ளது.
வட்டக்கச்சி சில்வா வீதியில் அமைந்துள்ள கிராம அலுவலாின் காணியில் துப்பரவு செய்யும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதே, காணியில் மிதி வெடி காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து இராமநாதபுரம் காவல்துறைக்கு அறிவிக்கபட்டு அவா்களால் மீட்கப்பட்டு இன்று திங்கள் கிழமை விசேட அதிரடிப்படையினரால் செயலிழக்கச்செய்யடவுள்ளது. இந்தக் காணியில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு ஏழு வருடங்களாக குறித்த குடும்பம் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Spread the love