163
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடரில் இலங்கை அணியின் தலைவர் அன்ஜலோ மெத்யூஸ் பங்கேற்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தசை பிடிப்பு உபாதை காரணமாக மெத்யூஸ் பாதிக்கப்பட்டுள்ளார். எனவே இந்த மாத இறுதியில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு20 போட்டித் தொடரில் மெத்யூஸ் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
தென் ஆபிரிக்க அணிக்கு எதிரான இரண்டாவது இருபதுக்கு20 போட்டியின் போது மெத்யூஸ் உபாதைக்கு உள்ளாகியிருந்தார். அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டித் தொடரின் தலைவராக உபுல் தரங்க கடமையாற்ற உள்ளார்.
Spread the love