அ.தி.மு.க சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள சசிகலா நாளை தமிழக ஆளுனர் வித்யாசாகர்ராவை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. அப்போது புதிதாக பதவி ஏற்கும் அமைச்சரவை பட்டியலையும் அவர் ஆளுனரிடம் வழங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சசிகலா சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிய அனைத்து எம்.எல்.ஏ.க்களும் வழிமொழிந்தனர்.
சசிகலா முதல்-அமைச்சராக பதவி ஏற்க வசதியாக ஓ.பன்னீர்செல்வம் பதவி வலகியதுடன் அமைச்சரவையும் பதவி விலகியது. ராஜினாமா கடிதங்கள் கவர்னர் வித்யாசாகர் ராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் நாளை செவ்வாய்க்கிழமை ஆளுனர் வித்யாசாகர்ராவை கிண்டி ஆளுனர் மாளிகையில் சசிகலா சந்தித்துப் பேசவுள்ளார். மேலும் தமிழக முதலமைச்சராக சசிகலா எதிர்வரும் 9ம் திகதி பதவியேற்கவுள்ளார்