Home இந்தியா ஜெயலலிதாவிற்கான சிகிச்சைக்கான செலவு 5.5 கோடி ரூபா – சிகிச்சையின்போது எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை :

ஜெயலலிதாவிற்கான சிகிச்சைக்கான செலவு 5.5 கோடி ரூபா – சிகிச்சையின்போது எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை :

by admin

மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 75 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில்  அவருக்கு சிகிச்சைக்கு மொத்தம் 5.5 கோடி ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்தனர்.

ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவர்கள் குழுவினர் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இதனை தெரிவித்தனர்.
மேலும் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கான செலவினை அவரது உறவினர்கள் அளித்ததாக அவர்கள் கூறினர்.  மேலும் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை எனவும்  உலகின் உயர்தர சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டதாகவும் சிகிச்சையில் யாரும் குறுக்கிடக்கிடவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை எனத் தெரிவித்த  மருத்துவர்கள் குழு மாரடைப்பு ஏற்படும் வரை ஜெயலலிதா பேசிக்கொண்டிருந்தார் எனவும் மாரடைப்பு வராமல் இருந்திருந்தால் ஒரு வாரத்தில் வீடு திரும்பி இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.

அத்துடன் ஜெயலலிதாவின் உடல் அவரது மறைவுக்குப் பின்னர் பதப்படுத்தப்பட்டது உண்மையே எனவும் ஜெயலலிதாவிற்கு சிகிச்சையின்போது அவரது கால் உட்பட எந்த உறுப்பும் அகற்றப்படவில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் ஜெயலலிதாவின் அறையில் சிசிடிவி கமராக்கள் இல்லை  எனத் தெரிவித்த லண்டன் வைத்தியர்; ரிச்சர்ட் பியல் அப்படியே இருந்தாலும் அவை நிப்பாட்டியே வைக்கப்படும் எனவும நோயாளிகள் பற்றிய புபை;படங்களை வெளியிட முடியாது எனவும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More