Home பிரதான செய்திகள்அலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்

அலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்

by admin

அலிஸ்டெர் குக் இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் அணித்தலைவர் பதவியிலிருந்து  விலகியுள்ளார். 32 வயதான அலிஸ்டெர் குக் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

இந்தியாவில் 4-0 என்ற நிலையில் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியபோது, தனது  அணித்தலைவர் பதவி தொடர்பாக கேள்விகள் எழுந்திருப்பதாக குக்  தெரிவித்துள்ளார்.

2012 ஆண்டு முதல் கிரிக்கெட் அணித்தலைவர் பொறுப்பை ஏற்ற அலிஸ்டெர் குக் தற்போது அதில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த 5 ஆண்டுகளாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியை உறுதியுடனும், நம்பிக்கையுடனும், மாபெரும் பெருமையுடனும் குக் வழிநடத்தியதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ஆன்ட்ரூ ஸ்ட்ரோஸ் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More