199
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மாலபேயிலுள்ள தொழில்நுட்ப மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவகத்துக்கு (சைட்டம்) எதிராக, அனைத்து பல்கலைக்கழக ஒன்றியத்தின் மருத்துவபீட மாணவர்களின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் பஸ் நிலையத்தில் கையெழுத்துப் போராட்டமொன்று இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
அதன் போது ‘நாட்டில் தற்போது இலவசக் கல்வி, சுகாதாரம் உள்ளதா?’, ‘எமது உரிமைகளை வென்றெடுக்கப் போராடுவோம்’ எனக் குறிப்பிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களும் இதன்போது விநியோகிகக்கப்பட்டன.
அதேவேளை மாலை போராட்டக்காரர்களால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது.
Spread the love