168
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடிக்கடி சந்திக்க உள்ளனர். ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் இவ்வாறு சந்திக்க உள்ளனர்.
முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் இவ்வாறு சந்திப்பு நடத்த உள்ளனர். இந்தவிதமான ஓர் கூட்டமொன்று அண்மையில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் நடைபெற்றுள்ளது.
அரசாங்கத்திற்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.
Spread the love