குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சிரியாவில் 13,000 பேருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள என சர்வதேச மன்னிப்புச் சபை தகவல்களை வெளியிட்டுள்ளது. சிரியாவின் டமாஸ்கஸிற்கு அருகாமையில் அமைந்துள்ள சயிட்நாயா( Saydnaya ) சிறையில் இவ்வாறு 13,000 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
84 சாட்சியாளர்களின் சாட்சியங்களுடன் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. நீதவான்கள், சிறை அதிகாரிகள், கைதிகள் உள்ளிட்டவர்கள் சாட்சியமளித்துள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஒரு வாரத்திற்கு ஒரு தடவை சுமார் 50 வரையிலான கைதிகள் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கண்கள் கட்டப்பட்ட நிலையில் அழைத்துச் செல்லப்பட்டு தண்டனை நிறைவேற்றப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.