179
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அரிசிக்கான உச்சபட்ச சில்லறை விலை அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த விலை நிர்ணயம் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
மூன்று வகையான அரிசிகளுக்கு இவ்வாறு விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாதம் 8ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படும் வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை அறிவித்துள்ளது.
Spread the love