148
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்ற அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றில் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரிய அவை நடவடிக்கைகளை பத்து நிமிடங்களுக்கு ஒத்தி வைத்துள்ளார்.
நேற்றைய தினம் நிறைவேற்றப்பட்ட நிதிச் சட்டம் தொடர்பிலான திருத்தங்கள் சமர்ப்பிக்கப்படாமையினால் இன்றைய தினம் பாராளுமன்றில் அமளிதுமளி ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சபாநாயகர் கட்சித் தலைவர்கள் கூட்டமொன்றை கூட்டியுள்ளார்.
Spread the love