181
தமிழக முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வத்தின் இல்லத்திற்கு இன்று சென்ற அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன், அவருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். அதிமுகவின் பொதுச்செயலராக சசிகலா பதவியேற்க வேண்டும் என முதலில் வலியுறுத்தியவர் மதுசூதனன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் இன்றைய தினம் சென்னை வரவுள்ள ஆளுநர் வித்யாசாகர் ராவ் மாலை 5 மணிக்கு ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பேசவுள்ளதாகவும் அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சசிகலா சந்தித்து பேசவுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
ஆளுநரை வரவேற்க ஓ.பன்னீர் செல்வம் விமான நிலையம் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love