174
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இந்தியாவுடனான உறவுகள் சிறந்த முறையில் காணப்படுகின்றது என இலங்கை தெரிவித்துள்ளது. இரு நாடுகளுக்கும் நட்புறவுடன் முன்னோக்கி நகர்வதாக இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா தெரிவித்துள்ளார்.
நல்லாட்சி அரசாங்கம் இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொண்டுள்ளதாகவும் மரபு ரீதியாக இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் உறவுகள் மேலும் வலுப்பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love