பிரான்ஸ் தலைநகர் பாரிசில் காவல்துறையினருக்கு எதிராக கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2ம் திகதி பாரிசுக்கு அருகே கைது செய்த 22 வயதான இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கடுமையாக சித்திரவதை செய்ததுடன் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தி இருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 4 காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் இளைஞரை துன்புறுத்தியதற்கு எதிப்புத் தெரிவித்து பாரிசின் புறநகர் பகுதியான அல்னே-சோயுஸ்-போயிஸ் (Aulnay-sous-Bois) இல் மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஏராளமான இளைஞர்கள் பங்கேற்ற இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்ததுடன் அருகில் உள்ள பகுதிகளுக்கு பரவியுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் 4-வது நாளாக இடம்பெற்ற போராட்டத்தின் போது வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். 10 வாகனங்கள் முழுவதுமாக எரிந்துள்ளதுடன் வாகன சாரதி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. இதனையடுத்தே கலவரம் தொடர்பாக 12 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.