312
டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சாவுக்கு ஹைதராபாத் சேவை வரித்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. வரி ஏய்ப்புத் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
சேவை வரி ஏய்ப்பு தொடர்பாக சானியா மிர்சா எதிர்வரும் பெப்ரவரி 16ம் திகதி நேரில் முன்னிலையாகி விளக்கம் அளிக்குமாறு ஹைதராபாத் சேவைவரித்துறை ஆணையகம் கடந்த பெப்ரவரி 6ம் திகதி ஆணை பிறப்பித.துள்ளது.
மேலும் அவர் நேரில் முன்னிலையாமல் அல்லது தகுந்த ஆவணங்களையோ சமர்ப்பிக்காமல் இருந்தால் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love

