குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
புகலிடக் கோரிக்கையாளர் முகாமை மூட வேண்டாம் என கென்ய அரசாங்கத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கென்யாவின் மேல் நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
உலகின் மிகப் பெரிய அகதி முகாம் தொகுதியாக இந்த முகாம் காணப்படுகின்றது. யுத்தம் காரணமாக சோமாலியாவிலிருந்து தப்பி வந்த 2 இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்கள் இந்தப் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அகதி முகாமை மூடுவதற்கு அரசாங்கம் எடுத்த தீர்மானம் ஏற்புடையதல்ல எனவும், முகாம்களை மூட முடியாது எனவும் மேல் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டடாப் (Dadaab ) என்ற முகாமையே இவ்வாறு மூட வேண்டாம் என உத்தரவிட்டுள்ளது.